www.garudabazaar.com

புதிய கெட்-அப்பில் மகேஷ் பாபு.. த்ரிவிக்ரம் இயக்கும் ஆக்சன் திரைப்படத்தின் வேறலெவல் லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் உருவாகும் SSMB28 படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Mahesh Babu New Look for SSMB 28 Movie Shooting Update

Also Read | தனது பணியாளர் இல்ல திருமண விழா.. தாலி எடுத்து கொடுத்த "சீயான் விக்ரம்"! வைரல் போட்டோஸ்

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோரின்  பிளாக்பஸ்டர் கூட்டணி #SSMB28 படத்துக்காக மீண்டும் இணையும் அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். வித்தியாசமான கான்செப்டுடன் கூடிய உயர்-ஆக்டேன் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இருக்கும் இந்த படத்தில், மகேஷ் பாபு அட்டகாசமான மாஸ் லுக்கில் தோன்றுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mahesh Babu New Look for SSMB 28 Movie Shooting Update

டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் கீழ் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) இப்படத்தை தயாரிக்கிறார்.

#SSMB28 என தற்காலிகமாக தலைப்புடன் இந்த படம் அழைக்கப்படுகிறது. இந்த படம் ஏப்ரல் 28, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mahesh Babu New Look for SSMB 28 Movie Shooting Update

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (12.09.2022) முதல் துவங்கி உள்ளது. எல்லா வயதினரையும் கவர்ந்திழுக்கும் ஸ்கிரிப்டை திரிவிக்ரம் உருவாக்கி உள்ளார். வெள்ளை நிறத்தில் டி சர்ட் அணிந்து கலைந்த முடியுடன் மகேஷ் பாபு தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படத்தை மகேஷ் பாபு மனைவி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Mahesh Babu New Look for SSMB 28 Movie Shooting Update

#SSMB28-ஐ தேசிய விருது பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் நவின் நூலி எடிட்டிங் செய்வார், அதே நேரத்தில் கலை இயக்குனர் ஏஎஸ் பிரகாஷ், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் எஸ் தமன் மற்றும் ஒளிப்பதிவாளர் பிஎஸ் வினோத் ஆகியோரும் படத்தில் உள்ளனர். மகேஷ் பாபு மற்றும் த்ரிவிக்ரமின் முந்தைய கூட்டணிகளான அத்தாடு மற்றும் கலேஜா ஆகியவை இன்றும் மக்கள் மத்தியில் கொண்டாடப்படுகின்றன, மேலும் #SSMB28 குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளன. இந்த படம் குறித்த கூடுதல் விவரங்களை குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mahesh Babu New Look for SSMB 28 Movie Shooting Update

Also Read | 'மாநாடு' கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் புதிய படம்.. தயாரிப்பாளர் இவரா? சூப்பர் அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Mahesh Babu New Look for SSMB 28 Movie Shooting Update

People looking for online information on Mahesh Babu, Mahesh Babu New Look Poster, SSMB 28 Movie, SSMB 28 Movie Shooting Update will find this news story useful.