www.garudabazaar.com

மகேஷ்பாபு படத்தில் இணைந்த பிரபல தமிழ் 'ரோலக்ஸ்' வில்லன் நடிகர்.. இவரா? அதிரடி தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் SSMB28 படத்தில் பிரபல தமிழ் வில்லன் நடிகர் இணைந்துள்ளார்.

RK Suresh Doing a Role in Super Star Mahesh Babu SSMB 28

Also Read | பிரபல OTT-யில் நேரடியாக ரிலீஸாகும் 'கோலி சோடா' படத்தின் மூன்றாம் பாகம்? படத்துக்கு பேரு இதானா?

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோரின்  பிளாக்பஸ்டர் கூட்டணி #SSMB28 படத்துக்காக மீண்டும் இணையும் அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். வித்தியாசமான கான்செப்டுடன் கூடிய உயர்-ஆக்டேன் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இருக்கும் இந்த படத்தில் பிரபல நடிகர் ஆர்.கே. சுரேஷ் இணைந்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது முகநூல் பக்கத்தில் சுரேஷ் வெளியிட்டுள்ளார்.

RK Suresh Doing a Role in Super Star Mahesh Babu SSMB 28

ஆர்.கே. சுரேஷ் தாரை தப்பட்டை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மருது படத்தில் 'ரோலக்ஸ் பாண்டியன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். சுரேஷ், விசித்திரன் & விருமன் படங்களில் சமீபத்தில் நடித்து இருந்தார்.  தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும் பல படங்களை தயாரித்தும் வினியோகம் செய்தும் வருகிறார்.

டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் கீழ் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) இப்படத்தை தயாரிக்கிறார்.

RK Suresh Doing a Role in Super Star Mahesh Babu SSMB 28

#SSMB28 என தற்காலிகமான தலைப்புடன் இந்த படம் அழைக்கப்படுகிறது. இந்த படம் ஏப்ரல் 28, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (12.09.2022) முதல் துவங்கி உள்ளது.

#SSMB28-ஐ தேசிய விருது பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் நவின் நூலி எடிட்டிங் செய்வார், அதே நேரத்தில் கலை இயக்குனர் ஏஎஸ் பிரகாஷ், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் எஸ் தமன் மற்றும் ஒளிப்பதிவாளர் பிஎஸ் வினோத் ஆகியோரும் படத்தில் உள்ளனர். மகேஷ் பாபு மற்றும் த்ரிவிக்ரமின் முந்தைய கூட்டணிகளான அத்தாடு மற்றும் கலேஜா ஆகியவை இன்றும் மக்கள் மத்தியில் கொண்டாடப்படுகின்றன.

RK Suresh Doing a Role in Super Star Mahesh Babu SSMB 28

மேலும் #SSMB28 குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளன. இந்த படம் குறித்த கூடுதல் விவரங்களை குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | BREAKING: தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'.. ஷூட்டிங் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா? செம்ம..

RK Suresh Doing a Role in Super Star Mahesh Babu SSMB 28

People looking for online information on Mahesh Babu, RK Suresh, SSMB 28, Super Star Mahesh Babu will find this news story useful.