''குட்டி ஏஞ்சல் வந்திருக்கா'' - இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு பிரபல இயக்குநர் வாழ்த்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 02, 2019 04:49 PM
இசையமைப்பாளர் மற்றும் பாடகராக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் ஷான் ரோல்டன். இவரது இசை போலவே இவரது குரலுக்கும் வெகுவாக ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இவர் பாடிய நானும் ரௌடி தான் படத்திலிருந்து கண்ணான கண்ணே மற்றும் ஒரு நாள் கூத்து படத்தில் அடியே அழகே போன்ற பாடல்கள் மிக பிரபலம்.

தற்போது இவரது இசையமைப்பில் ஜோதிகா நடித்து கடந்த மாதம் வெளியான படம் ராட்சஷி. இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரித்திருந்தனர். கௌதம் ராஜ் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு பிரபலங்கள் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குநர் ராஜூ முருகன், இசைத் தோழன் ஷான் ரோல்டன் - சுதா இணையருக்கு குட்டி ஏஞ்சல் வந்திருக்கிறாள். வாழ்த்துகள் ஷானப்பா!'' - என்று குறிப்பிட்டுள்ளார்.