'அருவம்’ இயக்குநர் சாய் சேகரின் தந்தை மரணம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 12, 2019 09:10 AM
தமிழ் திரைப்பட இயக்குநர் சாய் சேகரின் தந்தை மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.

சித்தார்த், கேத்ரின் தெரசா, சதீஷ், காளி வெங்கட் ஆகியோர் நடித்த ‘அருவம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார் இயக்குநர் சாய் சேகர்.
சமூக பிரச்சனையை பற்றி பேசும் ஹாரர் த்ரில்லர் படமான ‘அருவம்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குநர் சாய் சேகரின் தந்தை மாரடைப்பு காரணமான நேற்று(ஜூலை.11) இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். இதனை இயக்குநர் சாய் சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
போரூரை அடுத்த கொளப்பாக்கத்தில் அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாய் சேகரின் தந்தை மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags : Siddharth, Aruvam, Sai Sekhar