'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இவரின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'ராட்சஷன்' மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தையும் காவல்துறை அதிகாரியுமான குடவ்லா ஐபிஎஸ் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''32 வருட பொதுப்பணியில் இருந்த எனது இன்று ஓய்வு பெறுகிறார். அவரை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது.
அவரது பயணத்தில் உறுதியாக இருந்த கடவுளுக்கும், மற்ற அனைவருக்கும் நன்றி. போலீஸ் சீருடையில் தனது கடைசி பணிநாளில் தனது பேரனை அலுவலகத்தில் வைத்து புகைப்படம் எடுத்தார். அதனை பகிர்ந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், ''எனது தந்தையின் செயல்பாடுகளில் 10 சதவீதம் இருக்க ஆசைப்படுகிறேன். அது என்னை நல்ல மனிதனாக மாற்றும். எனது தந்தையை அறிந்தவர்கள், நான் சொல்வதை ஒத்துக்கொள்வார்கள். நிஜ ஹீரோ. அவருடைய கதையை சினிமா மூலம் மக்களுக்கு சொல்ல காத்திருக்கிறேன். அவர் தற்போது தனது புதிய வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.
32 years of public service...i hav seen my dad touch so many lives..As he retires today im so so proud of him🙏thank u god n thank u evryone who has been of great support in this journey..the first pic he took with his uniform n the last day at office with his grandson:)memorable pic.twitter.com/iwhHdr2JpG
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) June 30, 2019