பிரபல இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 12, 2019 08:32 AM
தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் (63), உடல்நலக் குறைவால் காலமானார்.
![Popular Director Pa.Ranjith's father Pandurangan passes away last night Popular Director Pa.Ranjith's father Pandurangan passes away last night](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-director-paranjiths-father-pandurangan-passes-away-last-night-news-1.jpg)
‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பா.ரஞ்சித், ‘மெட்ராஸ்’,‘கபாலி’,‘காலா’ போன்ற வெற்றி படங்களை இயக்கி பிரபலமானார். ‘நீலம் பண்பாட்டு மையம்’ நிறுவனத்தின் மூலம் கலை சார்ந்த பல விஷயங்களை செய்து வருவதுடன், திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பா.ரஞ்சித்தின் தந்தை இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். அவரது மறைவை தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் அவரது சொந்த ஊரான கர்லப்பாக்கத்தில் இறுதி ஊர்வலம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா.ரஞ்சித்தின் தந்தையின் மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.