டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரித்திருக்கும் படம் 'ராட்சஷி'. இந்த படத்தில் ஜோதிகா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, கோகுல் பினோய் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை கௌதம் ராஜ் எழுதி, இயக்கியுள்ளார். இந்த படம் இன்று (ஜூலை 5) வெளியாகவுள்ளது. இதன் முன்திரையிடல் நிகழ்வு நேற்று (ஜூலை 4) நடைபெற்றது. அப்போது ஹரிஷ் கல்யாண், விவேக் ஆகியோர் படம் குறித்து பேசினர்.
அப்போது பேசிய ஹரிஷ்,''எஜூகேஷன் சிஸ்டத்தை ஒரு ஹெட் மாஸ்டர் மாத்துன எப்படி இருக்கும் என்பது தான் இந்த படம். அரசு பள்ளிகளுக்கு மாடலாக இந்த பள்ளி இருக்கு. படத்துக்கு ஜோதிகா மேம், குட்டிக் குழந்தைங்க என எல்லா கேரக்டர்ஸும் படத்துக்கு தேவையானதா தான் இருக்கு. நான் ரொம்ப என்ஜாய் பண்ணேன். எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்'' என்றார்.
ஜோதிகாவின் 'ராட்சஷி' படம் எப்படி இருக்கு ? - HARISH KALYAN பதில் வீடியோ