“8 வருஷத்துக்கு முன்.. அந்த நாள்..! நீங்க கடவுளோட குழந்தை தான் அப்பா..” - சவுந்தர்யா ரஜினிகாந்த்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய வீடியோவை பகிர்ந்து சவுந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Soundarya Rajinikanth remembers her Father Rajinikanth's return to Chennai after treatment in Singapore

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிறுநீரக பாதிப்பு காரணமாக சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சூப்பர் ஸ்டாருக்காக அவரது கோடான கோடி ரசிகர்கள் பிரார்த்தனைகள் செய்தனர். பின்னர், சிகிச்சை முடிந்து கடந்த 13/7/2011-ல் தனது குடும்பத்துடன் சிங்கப்பூரில் இருந்து ரஜினிகாந்த் இந்தியா திரும்பினார்.

அந்த நிகழ்வை நினைவுக் கூறும் விதமாக ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், ‘வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அப்பா சிங்கப்பூரில் இருந்து சிகிச்சை முடிந்து சென்னை திரும்பி வந்தது. 8 வருடத்திற்கு முன் இதே நாளில் (13.7.2011). உண்மையில் நீங்க கடவுளின் குழந்தை தான் அப்பா. என் அப்பாவிற்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி’ என பகிர்ந்துள்ளார்.