'முண்டாசுப்பட்டி', 'தெகிடி', 'இறுதிச்சுற்று', 'மெர்சல்', 'ராட்சசன்' உள்ளிட்ட பல படங்களில் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் காளி வெங்கட்.

இவரது தந்தை தவசி பாண்டியன். 79 வயதாகும் இவர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை சுமார் 10 மணியளவில் காலமானார். இவரது இறுதிச்சடங்கு நாளை அரும்பாக்கத்தில் உள்ள அரது வீட்டில் நடைபெறவிருக்கிறது.
அவரது மறைவுக்கு திரையுலகில் நடிகர் காளி வெங்கட்டிற்கு நெருக்கமானவர்கள், அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை நடைபெறவிருக்கு இறுதிச்சடங்கில் திரையுலைகச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.