'தர்பார்' படத்தில் இருந்து வெளியான ரஜினியின் ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 02, 2019 03:06 PM
'பேட்ட' படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'தர்பார்'. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 'தளபதி படத்துக்கு பிறகு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ரஜினிகாந்துடன் இந்த படத்தில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி தற்போது சூப்பர் ஸ்டாரின் தர்பார் ஷூட்டிங் டெர்னா ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் நடைபெறுகிறது.
அப்போது ரஜினிகாந்த் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை மருத்துவமனையின் பிரத்யேக ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
Tags : Rajinikanth, Nayanthara, Anirudh, AR Murugadoss