மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இத்திரைப்படம் உருவாகிறது. மணிரத்னம் முதல் முதலாக எடுக்கும் மன்னன் காலத்து திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஷ்வர்யா ராய், த்ரிஷா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பேங்காக்கில் முடிவடைந்துள்ளது. இதன் பிறகு சில காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்தக்கட்ட வேலைகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டில் தற்போது இணைந்துள்ளதாக ரியாஸ் கான் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.