விக்ரமின் ’கோப்ரா’ - சென்னையின் பிரபல மாலில் படப்பிடிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கோப்ரா'. டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்குகிறார்.

Vikram's Cobra Shooting in Remy mall Chennai final schedule details are here

ஶ்ரீநிதி ஷெட்டி, மிர்னாளினி ரவி ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்க ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். விக்ரம் கோப்ராவுடன் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வனிலும் மாறிமாறி நடித்து வருகிறார். இரண்டு படங்ளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

கோப்ரா படத்துக்காக முன்பு கொல்கத்தாவில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர். சென்னையில் உள்ள ரெமி மாலில் கோப்ராவின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் கடைசி ஷெட்யூல் பிப்ரவரி இறுதியில் ரஷ்யாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Entertainment sub editor

Tags : Vikram, Cobra