சிவகார்த்திகேயனின் ’அயலான்’ ஷூட்டில் நடப்பது இது தான் – SK கொடுத்த அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நேற்று இன்று நாளை' படத்துக்கு பிறகு இயக்குநர் ஆர்.ரவிகுமார் சிவகார்த்திகேயனுடன் இணையும் திரைப்படம் 'அயலான்'. இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ், 24 ஏஎம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. தனது முதல் படத்திலேயே சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரை கையாண்டிருந்த ஆர்.ரவிகுமாருக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் கிடைத்தன.

Sivakarthikeyan, AR Rahman Ayalaan climax shooting going on Instagram Startus

அயலானும் இதே வகையான ஒரு படம் தான் என்று கருதப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ’அயலான்’ என்றால் வெளியாள் என்று அர்த்தம். ஒரு வேளை ஸ்பீல்பெர்கின் ’ET’ போல வேற்றுலகத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியனைப்பற்றிய கதையோ என நெட்டிசன்கள் விவாதித்துக் கொண்டிருக்க சிவகார்த்திகேயன் ஷூட் நிலவரம் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ஒரு நீல நிற விளக்கை க்ளிக் செய்திருக்கும் அவர் அயலான் க்ளைமாக்ஸ் ஷூட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor