’சூரரைப் போற்று’ சிங்கிள் ரிலீசில் புதிய முயற்சி… விமான பயணிகளுக்கு அடித்த லக்!
முகப்பு > சினிமா செய்திகள்சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று. நடிகை அபர்னா பாலமுரளி, மோகன்பாபு, காளிவெங்கட், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.
விமான சேவையை தொடங்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சூரரைப்போற்று படத்தின் டீசர் மற்றும் மாறா தீம் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்தது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான 'வெய்யோன்சில்லி' வெளியாகும் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாடலை கவிஞர் விவேக் எழுதி உள்ளார். இது சூர்யாவுக்கு இவர் எழுதும் முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 அன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் இந்த பாடல் சென்னை விமான நிலையத்தில் வெளியிடப்பட உள்ளது. தமிழ் சினிமாவில் விமான நிலையத்தில் பாடல் வெளியீடு நடப்பது இதுவே முதல் முறையாகும்.