தனுஷின் ’கர்ணன்’ ஷூட் பிசியில்… கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட 'டி40’ அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொங்கலுக்கு வெளியான 'பட்டாஸ்' திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டி40 படத்தில் நடித்து வந்தார். கேங்ஸ்டர் திரைப்படமான இதில் அவருடன் ஐஷ்வர்யா லக்‌ஷ்மின், ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ளனர்.

Dhanush Karthik Subbaraj important update on D40

இந்த படத்தில் தனுஷின் பகுதிகள் எப்போதோ முடிந்துவிட்ட நிலையில் மற்ற நடிகர்களை வைத்து மிச்ச போர்ஷன் ஷூட் நடைபெற்று வந்தது. நேற்று நடிகை ஐஷ்வர்யா லக்‌ஷ்மி தன் இறுதி நாள் படப்பிடிப்பு பற்றி இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தனுஷ் மாரி செல்வராஜின் இயக்கத்தில் நடித்து வரும் ’கர்ணன்’ படத்தின் ஷூட் திருநெல்வேலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் டி40-யின் ஷூட்டிங் வேலைகள் முழுமையாக முடிந்துவிட்டதாக தற்போது ட்வீட் செய்துள்ள கார்த்திக் சுப்புராஜ், தன்னோடு பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். விரைவில் இப்படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து பல படங்களில் புக் ஆகியிருக்கும் தனுஷ் ‘கர்ணன்’ முடிந்த கையோடு கார்த்திக் நரேனின் ’டி43’, அதையடுத்து சன் பிக்சர்சின் ’டி44’, ஹிந்தியில் தன்னை அறிமுகப்படுத்திய ஆனந்த் எல் ராயின் படம் ஆகியவற்றில் நடிக்க உள்ளார்.

Entertainment sub editor