கவினுக்கு கடனாக கிடைத்த சிவகார்த்திகேயன் பட பாட்டு - பிரபல நடிகர் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் நடிக்கும் படம் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.  ஆனாலும் கவினுக்கான ஆதரவு இன்னும் குறையவில்லை. அவர் பதிவிடும் போஸ்ட்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Kavin Shares a picture With Sivakarthikeyan's Kanaa Song

அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் நடிகர் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் சிறிய பாதையில் நடந்து வருவது போல இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்து, ''இந்த ஃபோட்டோவுக்கு மட்டும் உன் பாட்டை கடன் வாங்கிக்கிறேன் செல்லம்'' என்று தர்ஷனை குறிப்பிட்டு , ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன் என்ற 'கனா' படப் பாடலை குறிப்பிட்டுள்ளார். அதற்கு தர்ஷன் சிரிக்கிறார். 

கவினின் இந்த போஸ்ட்  வைரலாகி வருகிறது. சமீபத்தில் தர்ஷன் விவகாரத்தில் பேசிய தயாரிப்பாளர் ரவீந்திரன், பிக்பாஸில் எப்படி ஒருத்தன 100 நாளும் நல்லவனாவே காட்டுறீங்க. இன்னொருத்தன கெட்டவனாவே காட்டுனிங்க. இப்போ அவன் தான் நல்லவனா இருக்கான் என்றார். இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள் ரவீந்தர், கவினை பற்றித் தான் அப்படி கூறுகிறார் என்று மகிழ்ச்சியுடன் அந்த  வீடியோவை பகிர்ந்தனர்

Entertainment sub editor