நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' காம்போ!
முகப்பு > சினிமா செய்திகள்சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தர்பார்' படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'. இதில் ஆர்ஜே பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது நயன்தாரா-விக்னேஷ் பல்வேறு கோயில்களுக்கு போய் தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலானது.
இந்நிலையில் இந்த படத்தில் தற்போது கவுதம் கார்த்திக்கும், யாஷிகா ஆனந்தும் நடிக்க உள்ளனர். இருவரும் ஏற்கெனவே ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.கடவுள் பெயர் கொண்ட படத்தில் Ghost பட கூட்டாணி இணைவது காண்ட்ராஸ்ட் தான் என்றாலும் Funக்கு கேரண்டி இருக்கும் தானே.
நயன்தாரா தற்போது சிறுத்தை சிவா, ரஜினியை வைத்து இயக்கும் ’தலைவர் 168’ படத்தில் புக் ஆகியுள்ளார். ரஜினியுடன் கீர்த்திசுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் நயன்தாராவுக்கு வக்கீல் வேடம் என கூறப்படுகிறது.