மகேஷ் பாபு குறித்து அவரது மனைவி பழைய ஃபோட்டோவை பகிர்ந்து நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகைகளை முன்னிட்டு வெளியான 'சரிலேரு நீக்கெவ்வரு' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

Mahesh Babu's Wife Namratha emotional post about her husband

இந்நிலையில் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், ''தனது மனைவி குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார். அதில், மகிழ்ச்சியான 15 ஆம் வருட திருமண நாள் வாழ்த்துகள் என்னுடைய காதலே. இன்னும் கொஞ்சம் அதிகமாக நேசிக்கிறேன் நம்ரதா'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது மனைவி நம்ரதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் இணைந்திருக்கும் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்த அவர், ''ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவு காணும் வாழ்க்கையை நீ எனக்கு அளித்திருக்கிறாய். வாழ்க்கை முழுவதும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத காதலுடன் நிறைந்திருக்கிறது. இதனை விட நான் என்ன கேட்கப்போகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor