லாஸ்லியா உருக்கம் - முதல் முறையாக பிக்பாஸ் காதல் விவகாரம் குறித்து பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா தற்போது ஹர்பஜன் சிங்குடன் இணைந்து 'ஃபிரெண்ட்ஷிப்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஜேபிஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்க, ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து தயாரிக்கின்றனர்.

Bigg Boss fame Losliya shares about her Dad in Instagram

மேலும் நடிகர் ஆரி அருஜூனா ஹீரோவாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் ஹீரோயினாக  நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே , செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சி.சத்யா இசையமைக்கும் இந்த படத்தை ஆல்பர்ட் ராஜா இயக்குகிறார்.  சந்திரா மீடியா விஷன் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது அப்பாவின் புகைப்படத்தை பகிர்ந்து, ''பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பாச்சி. கடந்த 23 வருடங்களாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை பார்த்துக்கொண்டீர்கள். இந்த உலகத்துல எந்த பொண்ணும் இவ்ளோ தூரம் ஒரு டிவி சேனல்கு கூப்பிட்டு இந்த உலகமே கேவலமா கதைக்குற சிச்சுவேஷன்ல அவங்க அப்பாவ வச்சுருப்பாங்களானு தெரியல . ஆனா நீங்க இன்னும் என்னை  நேசிக்கிறீங்க. பொண்ணுங்களுக்கு தூய்மையான காதல் அவங்களுடைய அப்பாவிடம் தான் கிடைக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor