'பிகில்' சிங்கப் பெண்ணுக்கும் 'தெறி' பட வில்லனுக்கும் இப்படி ஒரு பாச உறவா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்த 'பிகில் திரைப்படம் கடந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு நல்ல வரவேற்பை பெற்றது. பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையப்படுத்திய இந்த படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக அறிமுகமானவர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா.

Thalapathy Vijay's Bigil Indraja shares a Pic with Theri Deena in Instagram

'பிகில்' படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'தெறி', 'வட சென்னை'  உள்ளிட்ட படங்களில் நெகட்டிவ் வேடத்தில் நடித்த தீனா இவருக்கு தாய் மாமாவாம்.  இந்நிலையில் இந்திரஜா தீனாவின் ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், ''உங்களை முதல் முதலில் பார்த்பொழுது கூப்பிட்ட வார்த்தை தான் இந்த நொடி வரைக்கும் கூப்பிடுகிறேன் "அப்பா". தாய் மாமன் என்ற உறவு தாயுக்கும் மேலானவர். என் சந்தோஷத்தை எனக்கு திருப்பி தந்த என்னவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்'' என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உங்களை முதல் முதலில் பார்த்பொழுது கூப்பிட்ட வார்த்தைதான் இந்த நொடிவரைக்கும் கூப்பிடுகிறேன் "அப்பா". தாய் மாமன் என்ற உறவு தாயுக்கும் மேலானவர். என் சந்தோஷத்தை எனக்கு திருப்பி தந்த என்னவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். Happy birthday Deena appa. I won't leave ur hands at any cause because I'm ur daughter appa. Love u appaaaaaaaa

A post shared by Indraja_sankar (@indraja_sankar) on

Entertainment sub editor