தளபதியின் 'மாஸ்டர்' சம்பவம் குறித்து பிரபல ஹீரோ கமெண்ட் - ''மாஸுக்கெல்லாம் மாஸ்டர் நம்ம தளபதி''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நெய்வேலி என்எல்சியில் நடைபெற்று வருகிறது. இதனயடுத்து பாஜகவினர் அங்கே சென்று படப்பிடிப்பு நடத்தக்கூடாது என போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

Thalapathy Vijay's Master, Harish Kalyan tweets about Vijays Mass

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்துக்கு முன்பு விஜய்யை காண ரசிகர்கள் குவிந்தனர். அதன் பிறகு தளபதி விஜய் அங்கே வந்து ஒரு வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். பின்னர் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் டிரெண்டானது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அந்த நிகழ்வை பகிர்ந்து விஜய் குறித்து பெருமிதம் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அந்த வீடியோவை பகிர்ந்த நடிகர் ஹரிஷ் கல்யாண், மாஸுக்கெல்லாம் அவர் மாஸ்டர் தளபதி என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor