சினேகா ஃபோட்டோ வெளியிட்டு உருக்கம் - 'எங்க வீட்டுக்கு ஒரு தேவதை வந்திருக்கா'
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை சினேகாவிற்கு கடந்த ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது இதனை பிரசன்னா மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தை மகள் வந்தாள் என்று பகிர்ந்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
![Sneha Shares about her Daughter in Instagram Page Sneha Shares about her Daughter in Instagram Page](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/sneha-shares-about-her-daughter-in-instagram-page-photos-pictures-stills.png)
இந்நிலையில் நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், ''கடந்த வாரம் என் வாழ்க்கையில் ஒரு ஏஞ்சல் வந்து என் வாழ்வை இன்னும் அழகாக்கியிருக்கிறாள். எங்கள் மீது அன்பை பொழிந்த உங்களுக்கு நன்றி. இன்னும் புகைப்படங்கள் விரைவில் வரும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை சினேகா தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்த 'பட்டாஸ்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். விவேக் - மெர்வின் கூட்டணி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளனர்.