சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமான மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ரேடியோ மிர்ச்சி எஃப்.எமில் தொகுப்பாளராக இருந்தவர் மிர்ச்சி செந்தில். இவர் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அத்தொடர் பெரிய வெற்றியடைய, இவர் தமிழகமெங்கும் பிரபலமானார். அத்தொடரில் கதாநாயகியாக நடித்த, ஶ்ரீஜாவும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதையடுத்து ரீல் ஜோடிகளாக இருந்த இருவரும் திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடிகளாக மாறினர்.
இந்நிலையில் மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். அப்பதிவில், 'இந்த போட்டோ எவ்வளவு பெரிய வைரல் பிக்சர் தெரியுமா..? எனக்கு வைரஸ் காய்ச்சல் வந்த போது இந்த போட்டோ எடுக்கப்பட்டது. க்ளினிக்கில் இருந்து வெளியில் வந்தவுடன் நாங்கள் எடுத்துகொண்ட புகைப்படம் இது. இப்போது தெரிகிறதா... வைரல் போட்டோன்னா என்னவென்று' என அவர் கிண்டலாக பதிவிட்டிருக்கிறார்.