“சத்தியமாக இனி என் படங்களில் நடனம் ஆடமாட்டேன்” - மாதவன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சாக்லேட் பாய் ரோல்களில் நடித்து இளைஞர்களை அதிகம் ஈர்த்தவர் மாதவன். தற்போது அவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் முன்னணி நடிகர்.

Madhavan Promise that he never gonna dance again in movies

மாதவன் நேற்று  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "இனி என் படங்களில் நடனம் ஆடமாட்டேன். இது சத்தியம்" என கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவை சேர்ந்த தி கிங்ஸ் என்ற நடனக்குழு World of Dance நிகழ்ச்சி பைனலில் ஜெயித்து $1 மில்லியன் பரிசு வென்ற விடியோவை பதிவிட்டு தான் மாதவன் இனி நடனம் ஆடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

அந்த நடனக்கலைஞர்களுக்கு ஈடுகொடுப்பது சாத்தியம் இல்லை என்பதை தான் மாதவன் இவ்வாறு பேசியுள்ளார்.

Tags : Madhavan