நடிகர் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்து நடித்துள்ள ‘K13' திரைப்படம் வரும் மே.3ம் தேதி ரிலீசாகவுள்ளது.

தல அஜித்துடன் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திலும், மாதவனுடன் ‘விக்ரம் வேதா’ திரைப்படத்திலும் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், Behindwoods-தளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் மாதவன் மற்றும் தல அஜித் போல பேசிக் காட்டி அசத்தினார்.
Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் ரேபிட் ஃபையர் ரவுண்டில் தல அஜித் மற்றும் மாதவன் போல் பேசிக்காட்டினார். அவர் கூறுகையில், மாதவன் அதிகம் Brother என்ற வார்த்தையை பயன்படுத்துவார். அது ரொம்ப அழகாக இருக்கும்.. அதேபோல் தல அஜித், ஷ்ரத்தா ஜி சாப்பிட்டீங்களா, நல்ல நிம்மதியா தூங்கினீங்களா என கேட்பார் என்றார்.
மேலும், தனக்கு பிடித்தமான பல விஷயங்கள் குறித்தும் பகிர்ந்துக் கொண்டார். தன்னை பற்றி தானே ஒரு வதந்தியை கிளப்பிவிட வேண்டும் என்றால், ஷ்ரத்தாவுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருப்பதாக கூறுவேன் என்றார்.
தல அஜித் , மேடி இப்படி தான் பண்ணுவாங்க - சுவாரஸ்யம் பகிர்ந்த ஷ்ரத்தா வீடியோ