ராக்கெட்ரி நம்பி லுக்- 14 நாள் சேலஞ்சில் வியக்க வைத்த மாதவன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மாதவன் நடித்து, இயக்கி வரும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Madhavan shares his unbelievable physical transformation for the Nambi Narayanan

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் உருவாகும் இப்படத்தை இயக்கி வந்த ஆனந்த் மகாதேவன், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் பொறுப்பை முழுவதுமாக நடிகர் மாதவன் ஏற்றுக் கொண்டு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

1990-களில் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணன், தனது வேலையை இழந்து சிறைச் சென்றார். சமீபத்தில் இது தொடர்பான வழக்கில் இருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்டார். நம்பி நாராயணின் சாதனையும், அவர் சந்தித்த சவால்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.

இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள மாதவனின் முதல் மற்றும் கனவு படமான ‘ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தில் நம்பி நாராயணனின் தோற்றத்தை பெற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். நம்பி நாராயணனின் தோற்றத்திற்காக தொடர்ச்சியாக 2 நாட்களுக்கு ஒரே நாற்காலியில் அமர்ந்து 14 மணிநேரம் மேக்-அப் போட்டுள்ளார். இத்துடன், அவர் போலவே தாடி, முடி, தொப்பை வளர்த்து அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல் எந்த ஒரு டயட் முறையும், சர்ஜரியும் இல்லாமல் 12 நாட்களில் தனது பழைய தோற்றத்திற்கு வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மாதவனின் இந்த ஃபிட்னஸ் சேலஞ்ச் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.