www.garudavega.com

சூர்யாவும், ஷாருக்கானும் பிரபல நடிகருக்காக ஃபிரெண்ட்லி கேமியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மாதவன் நடித்து, இயக்கி வரும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

Suriya has acted in a guest appearance in Madhavan's Nambi Narayanan Biopic Rocketry

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் உருவாகும் இப்படத்தை இயக்கி வந்த ஆனந்த் மகாதேவன், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் பொறுப்பை முழுவதுமாக நடிகர் மாதவன் ஏற்றுக் கொண்டு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

1990-களில் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணன், தனது வேலையை இழந்து சிறைச் சென்றார். சமீபத்தில் இது தொடர்பான வழக்கில் இருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்டார். நம்பி நாராயணின் சாதனையும், அவர் சந்தித்த சவால்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.

இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள மாதவனின் முதல் மற்றும் கனவு படமான ‘ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். தமிழில் நடிகர் சூர்யாவும், ஹிந்தியில் இந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.