''ஹப்பா... இரண்டு வருஷம் கழிச்சு ஒரு வழியா....'' தன் படம் குறித்து மாதவன் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாறு 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிவருகிறது. இந்த படத்தில் மாதவன் நடிப்பதோடு, இந்த படத்தை அவரே இயக்குகிறார்.

Madhavan Tweets About Rocketry -The Nambi Effect

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீஸர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது,. இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மாதவனுடன் 'விக்ரம் வேதா' படத்தில் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கீளின் ஷேவ் செய்யப்பட்ட முகத்துடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அவர், 'இரண்டு வருடம் ழித்து தாடியை சேவ் செய்துள்ளேன். பிரான்ஸ் செல்ல நம்பி நாராயணன் தயாராகிவிட்டார்' என பதிவிட்டுள்ளார்.