ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்னா 3' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தில் வேதிகா, ஓவியா, சூரி, கோவை சரளா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தை ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன் மற்றும் சன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன. இந்த படத்துக்கு தமன் பின்னணி இசை அமைத்திருந்தார்.
இந்நிலையில் கஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டித் தருவதாக நடிகர் லாரன் அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி கணேஷன் என்பவருக்கு வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. கடந்த வாரம் அந்த வீட்டுக்கு கிரகப்பிரவேசம் நடைபெற்றது.
இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்து வரும் செல்லகுஞ்சி என்கிற பாட்டிக்கும் வீடுக்கட்டிக் கொடுத்தார். பின்னர் 'இது போன்ற மக்கள் பணிகள் தொடர்ந்து நடைபெறும்' என ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.