காங்கிரஸ் சார்பாக வெளியான வீடியோவுக்கு மாதவன் கண்டனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேரங்கள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

Madhavan Condemned Congress video against Narendra Modi

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும், சீன பிரதமரையும் கிண்டல் செய்வது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் மாதவன், இது நல்ல ரசனை இல்லை. என்ன தான் அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் மோடி நமது நாட்டின் பிரதமர்.  அவரை குறைத்து மதிப்பிடும் வகையில் இந்த வீடியோ வெளியிட்டுள்ளீர்கள் . இது நகைப்புக்குரியதாக இல்லை. உங்களிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மாதவனின் இத்தகைய கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்த்தும் சிலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும், ஒரு சிலர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பதிவுகள் இட்டு வருகின்றனர். அதற்கு அவர் பதிலளித்து வருகிறார்.