பயத்திற்கு புதிய விலாசம் உண்டு; திகில் படம் குறித்து மாதவன் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாதவன் நடிப்பில் வெளியான ‘யாவரும் நலம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

Actor Madhavan agreed, will work on Yaavarum Nalam sequel

சூர்யா நடித்த ‘24’ திரைப்படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியான திரைப்பட்ம ‘யாவரும் நலம்’. திகில் திரைப்படமாக வெளியான இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்தார், ஷங்கர் எஹ்சான் லாய் இசையமைத்திருந்தார்.

மாதவன், நீத்து சந்திரா, சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்த இப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை கடந்த நிலையில், ட்விட்டரில் #10YearsOfYaavarumNalam, #13B என்ற ஹேஷ்ட்டேக்குகளை உருவாக்கி ரசிகர்களும், படக்குழுவினரும் கொண்டாடினர்.

அப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்த ரசிகர்களுக்கு நடிகர் மாதவன் பதிலளித்துள்ளார். அவரது ட்வீட்டில், இதை ஒப்புக் கொள்கிறேன். 13B/யாவரும் நலம் ரீலோடட்.(பயத்துக்கு புது விலாசம் உண்டு ஜாக்கிரதை) என பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. நடிகர் மாதவன் தற்போது ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தை இயக்கி, நடித்து வருகிறார். மேலும், அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் சைலன்ஸ் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் மாதவன் நடிக்கவிருக்கிறார்.