இந்த படத்திற்காக மீண்டும் இணைந்த விக்ரம் வேதா கூட்டணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மாதவன் நடித்து, இயக்கி வரும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். 

Sam C.S to score music for Madhavan's directorial debut film Rocketry: The Nambi effect

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் உருவாகும் இப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. 1990-களில் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணன், தனது வேலையை இழந்து சிறைச் சென்றார். சமீபத்தில் இது தொடர்பான வழக்கில் இருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.

நம்பி நாராயணின் சாதனையும், அவர் சந்தித்த சவால்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இதற்கு முன்பாக மாதவன் நடித்த ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘ராக்கெட்ரி’ திரைப்படத்திற்கு இசையமைப்பது குறித்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தனது ட்வீட்டில், ‘ராக்கெட்ரி போன்ற ஒரு திரைப்படத்திற்கு இசையமைப்பேன் என்பதை நினைத்துக் கூட பார்த்ததில்லை. என் மனதிற்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். உண்மை கதையை பிரம்மாண்டமாக சொல்லும் இப்படத்தில் பணியாற்றுவது ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். இப்படத்தை இயக்கும் மாதவனுக்கும், இதில் எனக்கு இசையமைக்க வாய்ப்பு தந்ததற்கும் நன்றி’ என ட்வீட் செய்துள்ளார்.