www.garudabazaar.com

'Baba' : "கரை கடக்குற புயல் மாண்டஸ், ஆனா 46 வருசமா வீசுற புயல் ரஜினி" - வைரமுத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான படம் 'பாபா'. அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.

Lyricist vairamuthu about rajinikanth in baba re release event

கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.  பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.

மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு பாபா திரைப்படம், புது பொலிவுடன் இன்று (10.12.2022) திரை அரங்குகளில் மீண்டும் ரிலீஸ் ஆகி உள்ளது. முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங்  செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

சில காட்சிகள் இணைக்கப்பட்டு டப்பிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், ரீ ரிலீசிற்கு அமோக வரவேற்பையும் மக்கள் அளித்துள்ளனர். முன்னதாக, சென்னையில் நடந்த பாபா திரைப்படத்தின் சிறப்பு திரையிடலில் தயாரிப்பாளர் கலைப்புலி S தானு, கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் பாபா திரைப்பட நிகழ்வில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, "46 வருடங்களாக ஒரு புயல் வீசிக்கொண்டிருக்கிறது. கரை கடக்கிற புயலுக்கு மாண்டஸ் என்று பெயர். நன்மை மட்டுமே செய்யக்கூடிய இந்த புயலுக்கு ரஜினி என்ற பெயர்.

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு. சிகரத்தை அடைந்தால் அங்கேயே குடிசை போட்டு தங்கி விடாதே. அங்கேயே அமைதியாகி அமர்ந்து விடாதே. சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு. சிகரம் என்பது இன்னொரு படி. அந்த சிகரத்தை தாண்டி வானத்தில் ஏறு என்பது தான் ரஜினிகாந்தின் கொள்கை. ரஜினிகாந்த் உயரத்தில் இருப்பது மட்டுமல்லாமல் அந்த உயரத்தில் இருந்து அடுத்த உயரத்துக்கு போகிறார்" என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Lyricist vairamuthu about rajinikanth in baba re release event

People looking for online information on Baba Re Release, Rajinikanth, Vairamuthu will find this news story useful.