www.garudabazaar.com

கேரள ஸ்டைலில் கௌதம் & மஞ்சிமா திருமணம்.. நேரில் வாழ்த்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! கவரும் PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்.

Aishwarya Rajinikanth wishes Manjima Mohan Gautam Karthik wedding

கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர்,  நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். அதனைத் தொடர்ந்து 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். தற்போது 1947, பத்து தல படங்களில் நடித்து வருகிறார்.

Aishwarya Rajinikanth wishes Manjima Mohan Gautam Karthik wedding

அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த  'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்', விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்.

Aishwarya Rajinikanth wishes Manjima Mohan Gautam Karthik wedding

சில நாட்களுக்கு முன் நடிகர் கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டனர். மேலும் தாங்கள் காதலிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். 

அந்த புகைப்படங்கள் அடங்கிய  நடிகை மஞ்சிமா மோகன் பதிவிற்கு இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  "எனக்கு பிடித்த இருவர் ஒன்றாக" என வாழ்த்து கூறினார்.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'வை ராஜா வை' படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் கௌதம் கார்த்திக் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Rajinikanth wishes Manjima Mohan Gautam Karthik wedding

இந்நிலையில்  ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கேரள முறையில் தென்னங்குருத்து & குத்து விளக்கு வைத்து நடைபெற்ற கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணத்தில் கலந்து கொண்ட பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், பொருத்தமான கல்யாணம், பொருத்தமான ஜோடி, பொருத்தமான சிரிப்பும் அன்பும், ஒரு திருமணத்தில் இருவீட்டாரின் பக்கமான நபராக இருப்பது பெரும் மகிழ்ச்சியானது. என் அன்பான கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் இருவரும் இந்த அழகான பயணத்தின் மூலம் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth wishes Manjima Mohan Gautam Karthik wedding

People looking for online information on Aishwarya Rajinikanth, Gautham Karthik, Manjima Mohan will find this news story useful.