www.garudabazaar.com

Baba : ரஜினிகாந்தின் பாபா ரீ ரிலீஸ் ... வெளிநாட்டு உரிமத்தை கைப்பற்றிய லைகா நிறுவனம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2002-இல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா உள்ளிட்ட ரஜின்காந்த்தின் தொடர் வெற்றிப்படங்களை அடுத்து நான்காவது முறையாக பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

Lyca bagged Rajinikanths Baba overseas Re Release rights

Also Read | “அழகான காதல் கதை”.. மாமனிதனை தொடர்ந்து ‘மெஹந்தி சர்க்கஸ்’ ஹீரோவை இயக்கும் சீனு ராமசாமி..!

கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.  பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர். தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங்  செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Lyca bagged Rajinikanths Baba overseas Re Release rights

முன்னதாக பாபா படம் குறித்து பிஹைண்ட்வுட்ஸில் பேசிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, “இப்போது இருக்கும் ஆடியன்ஸுக்கு இந்த படம் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. இந்த படம் எந்த ஓடிடியிலும் இல்லை. யூடியூபிலும் இல்லை. அதிர்ஷ்டவசமாக டிவியில் ஒரே ஒருமுறைதான் போடப்பட்டதாக தெரிகிறது. இந்த படம் ரஜினி சாரின் ப்ரொடக்ஷனில் உருவான திரைப்படம். அவர் எங்கேயும் கொடுக்கவில்லை. அந்த திரைப்படத்தை அவரே வைத்துக் கொண்டிருந்தார். எனவேதான் ரஜினி சார் இந்த திரைப்படத்தை இப்போது ரிலீஸ் பண்ணலாம் என்று சொன்னபோது நிச்சயமாக பண்ணி விடலாம் என்று கூறினேன்.

Lyca bagged Rajinikanths Baba overseas Re Release rights

அபோதைய சர்ச்சை மற்றும் குழப்பங்கள் பலவற்றால் இந்த திரைப்படத்துக்கான உண்மையான மெரிட் அப்போது கிடைக்கப்பெறவில்லை. இப்போது இந்த படம் ரிலீசானால் நிச்சயமாக அண்ணாமலை, பாஷா போன்ற சூப்பர் ஹிட் படங்கள் வரிசையில் இந்த படம் சேரும்.” என தெரிவித்தார். மேலும் தற்போது ரிலீஸ் ஆகவுள்ள பாபா படத்தின் நீளம் 2:30 மணி நேரத்துக்குள் சுருக்கப்பட்டதாகவும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்திருந்தார்.

Lyca bagged Rajinikanths Baba overseas Re Release rights

இந்நிலையில் பிரபல லைகா தயாரிப்பு நிறுவனம், பாபா படத்தின் வெளிநாட்டு ரீ ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இது தொடர்பான அந்த அறிவிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரஜினிகாந்த்தின் கதை, திரைக்கதை, தயாரிப்பிலான பாபா படத்தின் ஓவர்சீஸ் ரீ ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய லைகா நிறுவனம், வெளிநாடுகளில் பாபா படத்தை லைகா நிறுவனம் விமர்சியாக ரிலீஸ் செய்யவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | “துணிவு-ல வில்லனா நடிச்சிருக்க வேண்டியது”.. ‘வாரிசு’-ல் இணைந்த ஷ்யாம் EXCLUSIVE

தொடர்புடைய இணைப்புகள்

Lyca bagged Rajinikanths Baba overseas Re Release rights

People looking for online information on Baba, Rajini, RajinikanthLyca, Suresh krishna will find this news story useful.