www.garudabazaar.com

"தட்டி விட்டா தாறுமாறு".. ரசிகர்களை Vibe ஆக்கிய Chilla Chilla புயல்.. ஒரே நாளில் படைச்ச சாதனை!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் முதல் சிங்கிளான 'சில்லா சில்லா' பாடல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது.

Ajith Kumar Thunivu chilla chilla song reached 10 million views

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் H வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருடன் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக துணிவு படத்தின் மூலம் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் அஜித் குமார்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர்களுடன் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, அமீர், பாவனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Ajith Kumar Thunivu chilla chilla song reached 10 million views

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜீ மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், உள்ளிட்ட பல இடங்களில் துணிவு படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் அடுத்தடுத்து அப்டேட்களையும் ரசிகர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். அப்படி ஒரு சூழலில், துணிவு படத்தின் முதல் சிங்கிளான Chilla Chilla நேற்று (09.12.2022) வெளியாகி இருந்தது.

இந்த பாடலை பாடலாசிரியர் வைசாக் எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையில் அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். இந்த பாடலில் வரும் இசை மற்றும் வரிகள், ரசிகர்கள் பலரையும் Vibe மோடுக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், தொடர்ந்து பாடலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Ajith Kumar Thunivu chilla chilla song reached 10 million views

இந்த நிலையில், 24 மணி நேரத்திற்குள் Chilla Chilla பாடல், யூடியூப் தளத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. அது மட்டுமில்லாமல், 1 மில்லியன் லைக்குகளை Chilla Chilla பாடலின் லிரிக் வீடியோ பெற்றுள்ளது. ஜிப்ரானின் இசை, அனிருத் குரல் மற்றும் வைசாக் வரிகள் உள்ளிட்ட விஷயங்கள், Chilla Chilla பாடலை வேற லெவலில் ட்ரெண்ட் செய்து வருவதால், படத்தின் ரிலீஸின் போது இந்த பாடலை திரையில் காணவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Thunivu chilla chilla song reached 10 million views

People looking for online information on Ajith Kumar, Anirudh Ravichander, Chilla Chilla, Ghibran, H Vinoth, Thunivu will find this news story useful.