www.garudabazaar.com

"தீ தளபதி".. அதுக்கு இதான் சாம்பிள்.. இணையத்தை ஆக்கிரமித்த நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் இதற்கு முன்பு பீஸ்ட் திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம், 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.

thalapathy vijay attend marriage function video gone viral

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகின. இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

வாரிசு படத்தின் இரண்டு பாடல்களாக 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' வெளியாகி, தொடர்ந்து ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது. இதற்கடுத்து வாரிசு படம் குறித்த புதிய அப்டேட்களையும் ரசிகர்கள்  எதிர்நோக்கி வருகிகின்றனர். மறுபக்கம், வாரிசு படத்தின் இறுதி கட்ட பணிகளும் படு வேகமாக நடைபெற்று வருகிறது.

thalapathy vijay attend marriage function video gone viral

இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகிறது. கையில் பூங்கொத்துடன் கூலாக சிறிதுக் கொண்டே விஜய் நடந்து வர, அவரை சுற்றிலும் ஏராளமானோர் சூழ்ந்தும் கொண்டனர். வெள்ளை நிற ஷார்ட் அணிந்து கொண்டு ஸ்மார்ட்டாக வந்த விஜய்யின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

 

 

Tags : Vijay, Varisu

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

thalapathy vijay attend marriage function video gone viral

People looking for online information on Varisu, Vijay will find this news story useful.