www.garudabazaar.com

BABA : ரஜினி நடிப்பில் பாபா ... வந்தாச்சு அதிகாரப்பூர்வ ரீ ரிலீஸ் தேதி.. வேகமாக புக் ஆகும் TICKETS..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாபா படத்தின் ரீ ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. 2002ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா.

Super Star Rajinikanth Baba Release Date official

Also Read | லீக் ஆன 'துணிவு' படத்தின் பாடல் வீடியோ.. வைரலாகும் பாடகர் வைசாக்கின் இன்ஸ்டாகிராம் பதிவு!

அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.

கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார்.

Super Star Rajinikanth Baba Release Date official

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.  பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.

மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது.

Super Star Rajinikanth Baba Release Date official

தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங்  செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Super Star Rajinikanth Baba Release Date official

மேலும் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவும் துவங்கி உள்ளது. அதிகாலை 4 மணி காட்சிகளும் பல திரைப்படங்களில் திரையிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | வாரிசு படத்தில் S.J. சூர்யா.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth Baba Release Date official

People looking for online information on Baba Movie, Baba Release update, Rajinikanth, Super Star Rajinikanth will find this news story useful.