www.garudabazaar.com

Baba : “கடைசி மந்திரத்தை CM -ஆக பயன்படுத்துறது பற்றி ரஜினி சார் பேசும்போது..” - சுரேஷ் கிருஷ்ணா EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2002-இல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா உள்ளிட்ட ரஜின்காந்த்தின் தொடர் வெற்றிப்படங்களை அடுத்து நான்காவது முறையாக பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

rajinikanth character in baba suresh krishna exclusive

கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.  பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.

மகா அவதாரமான பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் DI, மிக்ஸிங் போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், படத்தின் முன்னோட்டத்தை, தான் முதலில் பார்வையிடுவதற்கு கோரிக்கை வைத்துள்ளார். இதன் மூலம், தன்னால் படத்தின் இசையினை மேலும் மேம்படுத்த இயலுமா? என்பதனை அவர் பார்வையிட உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த பாபா பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா,  “பாபா பட சமயத்தில் நாம் பண்ணிய மெனக்கெடலுக்கு அப்போதைய ரெஸ்பான்ஸ் அந்த படத்தில் இருந்த விஷயங்களுக்கு குறைவுதான். இப்போதும் சிறியோர் முதல் பெரியோர் வரை, இன்றைய 2 கே கிட்ஸ் வரை ரஜினி சாரை லவ் பண்ணுகிறார்கள். 

ரஜினி சாரின் ஸ்டைல் அனைத்தையும் சின்ன மொபைலில் கணினியில் காண்பதை விட, தியேட்டரில் பார்ப்பதே குதூகலம். எனவே படம் மீண்டும் தியேட்டரில் வெளியானால் இன்னும் ரெஸ்பான்ஸ் இருக்கும்.” என்று சொன்னவர்,  பாபா படத்தில் ரஜினிகாந்த் முதல்வராவது குறித்த விஷயங்கள் பேசப்படும், அது குறித்து ரஜினியின் பார்வை என்ன என இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, “பாபா படத்தைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் சார் கதை திரைக்கதை எழுதியிருந்தார். நாம் என்ன பண்ணுகிறோம் என்பது குறித்த முழு விழிப்புணர்வும் அவரிடம் இருந்தது. அந்த கதைக்கும் கேரக்டருக்கும் பொருத்தமானதாகவே நாம் பண்ணி இருந்தோம். ரஜினிகாந்த் சார் பேசும்போது அவருக்கு முன்பாக ஃபோர்கிரவுண்டில் முதல்வர் என்று எழுதப்பட்ட பலகை இருந்ததுதான். ஆனால் ரஜினி சார் எந்த இடத்திலும், தான் முதல்வராவது குறித்த குறிப்பை கொடுத்திருக்க மாட்டார். அந்த படத்தை அதற்கு பயன்படுத்துவது போல் எந்த கட்சியும் அங்கு இருக்காது.

சொல்லப்போனால் இன்னொரு காட்சியில் ரஜினி சாரே கடைசி மந்திரத்தை நீங்கள் முதல்வராவதற்கு வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று உடன் இருந்தவர்கள் சொல்லும்போது, ரஜினி சார் பதில்பேசும் விதமே பிரமாதமாக இருக்கும். முதல்வர் என்றால் சாதாரண பணி என்று நினைத்தீர்களா? என்று பேசுவார். அதுதான் அவருடைய கருத்தியல் நிலைப்பாடாகவும் இருக்கும், பர்சனலாகவும் சரி கேரக்டராகவும் சரி அங்கு ஒன்றிருக்கும். எல்லாத்தையும் ட்விஸ்ட் பண்ணினால் ஒன்றும் செய்யமுடியாது” என இயல்பாய் கூறினார்.. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேசும் முழு பேட்டியை இணைப்பில் காணலாம்.

BABA : “கடைசி மந்திரத்தை CM -ஆக பயன்படுத்துறது பற்றி ரஜினி சார் பேசும்போது..” - சுரேஷ் கிருஷ்ணா EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

rajinikanth character in baba suresh krishna exclusive

People looking for online information on Baba, Rajinikanth, Suresh krishna will find this news story useful.