www.garudabazaar.com

அடடே.. இளைய மகனுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட க்யூட் போட்டோ..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது இளைய மகன் லிங்காவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Aishwarya Rajinikanth with Her Son Linga viral Photo

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை  இயக்க உள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாயாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

சமீபத்தில் A.R. ரஹ்மான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைந்து இசையமைப்பு பணிகளை துவங்கும் வீடியோவை வெளியிட்டார். ரஹ்மான் ஹார்மோனியம் வாசிப்பது போல இந்த வீடியோ காட்சிகள் அமைந்தது.

மேலும் சூப்பர் ரஜினிகாந்த் & ரஹ்மான் சந்திப்பும் சமீபத்தில் நடந்தது. இது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

Aishwarya Rajinikanth with Her Son Linga viral Photo

இச்சூழலில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைய மகன் லிங்காவை அணைத்திருக்கும்  புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth with Her Son Linga viral Photo

People looking for online information on Aishwarya Rajinikanth, Linga will find this news story useful.