www.garudabazaar.com

திருவண்ணாமலை கோயிலில் இருந்து வந்த பூஜை மாலை.. திருவாசகம் பாடி மயில்சாமி உடலுக்கு அஞ்சலி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

Thiruvannamalai Temple Vetiver Malai in Mayilsamy Funeral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "மயில்சாமியின் மரணம் தற்செயலானது அல்ல".. - உருக்கமாக பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

57 வயதான நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர்.

1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில்   நடித்து வந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட  படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர்.  2000- காலகட்டத்தில்  நடிகர் விவேக் & வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் மயில்சாமி பிரபலமானார்.

தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடிகர் மயில்சாமி தொகுத்து வழங்கியுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் நேற்று அதிகாலை மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார் .  நடிகர் மயில்சாமி உடலுக்கு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, பார்த்திபன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Thiruvannamalai Temple Vetiver Malai in Mayilsamy Funeral

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இருந்து பூஜிக்கப்பட்ட வெட்டிவேர் மாலை குருக்கள் மூலம் கொண்டு வரப்பட்டு மயில்சாமி உடலுக்கு அணிவிக்கப்பட்டது. முன்னதாக சிவாச்சாரியார்கள் மூலம்  திருவாசகம் திருமுறையில் உள்ள சிவபுராணம் பாடப்பட்டது. மேலும் சிவ வாத்தியம் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் மீது அதீத பக்தி கொண்டவர் நடிகர் மயில்சாமி என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு மயில்சாமி செய்த நற்செயல்கள் நினைவு கூறப்பட்டன.

Also Read | சத்குரு ஜக்கி வாசுதேவ்-வுடன் GP முத்து.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்! இதோ

திருவண்ணாமலை கோயிலில் இருந்து வந்த பூஜை மாலை.. திருவாசகம் பாடி மயில்சாமி உடலுக்கு அஞ்சலி. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Thiruvannamalai Temple Vetiver Malai in Mayilsamy Funeral

People looking for online information on Mayilsamy, Mayilsamy Funeral, Thiruvannamalai Temple, Thiruvannamalai Temple Vetiver Malai will find this news story useful.