www.garudabazaar.com
iTechUS

“தமிழ் ரசிகர்களோட 'துணிவு' படத்தை பார்க்கணும்” - நம்ம ‘கண்மணி ’ மஞ்சு வாரியர் விருப்பம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புவதாக இப்படத்தில் நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.

love to watch Thunivu with Tamil Audience Manju Warrier

Also Read | "அட .. இந்த வெர்ஷன் நல்லாருக்கே".. விஜய்க்கு கதை சொன்ன ரஷ்மிகா! ‘வாரிசு’ Sneak Peek

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் 'அசுரன்' படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான, 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட், சாண்டல் வுட் என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

H. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்த இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்துள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸில் முதல் நாளில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார்.  

இதன் பிறகு அவர் பேசுகையில், “முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தேன். அதிரடி வேடத்தில் நடித்திருப்பது இதுவே முதல் முறை. இது போன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பயிற்சி அவசியம். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. கேரளாவில் இந்த படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன்.” என்றார்.

Also Read | தாய் மொழி பண்டிகையான  ‘பொங்கல்’ அடுத்த தலைமுறைக்கும் போக வேண்டும்.! - ஹிப் ஹாப் தமிழா

தொடர்புடைய இணைப்புகள்

love to watch Thunivu with Tamil Audience Manju Warrier

People looking for online information on Ajith Thunivu, Manju Warrier will find this news story useful.