www.garudabazaar.com
iTechUS

அடடே.. அஜித், மஞ்சு வாரியர் கிட்ட ஏதோ சொல்றாப்ல .. வைரலாகும் துணிவு BTS கிளிக்ஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் இதுவரை காணாத படப்பிடிப்பு தள புகைப்படங்களை மஞ்சு வாரியர் வெளியிட்டுள்ளார்.

Manju Warrier shared Ajith Kumar Unseen Photos from Thunivu

Also Read | சாமி சரணம் ஐயப்பா... சபரிமலை யாத்திரை போகும் ‘துணிவு’ இயக்குநர் H.வினோத் ... வைரல் வீடியோ

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி உள்ள அஜித்குமாரின் 'துணிவு' திரைப்படத்தில்  நடிகை மஞ்சு வாரியர் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான,   'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட், சாண்டல்வுட் என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

மஞ்சு வாரியர், கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸ் திரையரங்கில் முதல் நாள் முதல் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார்.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்.

இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

இந்த படத்தில் நடிகர்கள் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தனது முகநூல் பக்கத்தில் நடிகர் அஜித் உடன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட BTS புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், நடிகர் அஜித்திற்கு மஞ்சு வாரியர் நன்றி கூறியுள்ளார். வெண்ணிற உடையணிந்து நடிகர் அஜித் & மஞ்சு வாரியர் கலந்துரையாடல் செய்வது போல் புகைப்படங்கள் அமைந்துள்ளன.

Also Read | "இருமுடி கட்டி வாரோமப்பா".. சபரிமலைக்கு போகும் விக்கி.. AIR PORT-ல் குழந்தைகள் பற்றி அளித்த பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

Manju Warrier shared Ajith Kumar Unseen Photos from Thunivu

People looking for online information on Ajith Kumar, Manju Warrier, Thunivu will find this news story useful.