www.garudabazaar.com

'அசுரன்' பச்சையம்மா.. 'துணிவு' கண்மணி.. 2 கேரக்டருக்கும் உள்ள ஒற்றுமை இதான்!- மஞ்சு வாரியர் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மஞ்சு வாரியர் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Manju Warrier Exclusive about Thunivu Kanmani Asuran Pachaiammal

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. 

Manju Warrier Exclusive about Thunivu Kanmani Asuran Pachaiammal

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Manju Warrier Exclusive about Thunivu Kanmani Asuran Pachaiammal

சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்கள்தான் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 55 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை நடிகை மஞ்சு வாரியர் அளித்துள்ளார். துணிவு படத்தில் நடிகை மஞ்சு வாரியர் 'கண்மணி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த பேட்டியில், "துணிவு கண்மணி, அசுரன் பச்சையம்மாள் இரண்டு கேரக்டருக்கு இடையே உள்ள ஒற்றுமை & வேற்றுமை என்ன?" என்ற கேள்விக்கு "இரண்டு கதாபாத்திரமும் அவரவர் சூழலில் மிகவும் பலம் வாய்ந்த பெண்கள் என்பது ஒற்றுமை. இருவரும் கையாளும் விதம் வித்தியாசமானது." என மஞ்சு வாரியர் பதில் அளித்துள்ளார்.

'அசுரன்' பச்சையம்மா.. 'துணிவு' கண்மணி.. 2 கேரக்டருக்கும் உள்ள ஒற்றுமை இதான்!- மஞ்சு வாரியர் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Manju Warrier Exclusive about Thunivu Kanmani Asuran Pachaiammal

People looking for online information on Ajith Kumar, AK, Asuran, Manju Warrier, Thunivu will find this news story useful.