www.garudabazaar.com

“தமிழ்நாட்டுல துணிவு & வாரிசு ரெண்டுமே... ” - தயாரிப்பாளர் தனஞ்செயன் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் வரும் பொங்கலுக்கு விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு ஆகிய இரண்டு படங்களுமே ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் இருவரது ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Producer Dhananjayan on Vijay Varisu and Ajith Thunivu Release

விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். 

Producer Dhananjayan on Vijay Varisu and Ajith Thunivu Release

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகின. இப்படத்திற்கு, இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றியுள்ளார்.

அதேபோல, H. வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகிவரும் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனிடையே, சென்னை நகரம், கோவை, வட மாற்றும் தென் ஆற்காடு பகுதிகளில் வாரிசு படத்தையும் உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலமாக ரிலீஸ் செய்ய இருக்கிறார்.

இதனிடையே, வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, தெலுங்கு சேனல் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், "தமிழ்நாட்டில் நடிகர் விஜய் நம்பர் ஒன் நடிகர். இது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை வாரிசு & துணிவு படத்திற்கு சரி பாதியாக ஒதுக்கீடு செய்தது ஏற்புடையதல்ல. வாரிசு படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். எனவே இந்த தியேட்டர் பங்கீடு குறித்து உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளேன்" என தில் ராஜூ கூறியிருந்தார்.

Producer Dhananjayan on Vijay Varisu and Ajith Thunivu Release

இந்நிலையில், இதுகுறித்து BOFTA தனஞ்செயன் நமது Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார். அதில்,"தமிழகத்தை பொறுத்தவரையில் விஜய் சார் மற்றும் அஜித் சார் இருவருக்குமே நல்ல மார்க்கெட் இருக்கு. அதுனால யார் நம்பர் 1, நம்பர் 2 னு சொல்லவே முடியாது. அவர் எதன் அடிப்படையில் இப்படி பேசினார் என்பது தெரியவில்லை. அவர் லலித் சாருக்கு படத்தின் ரிலீஸ் உரிமையை கொடுத்திருக்கிறார். அப்படியிருக்க இதுபற்றி அவர் பேசியது ஏன் எனத் தெரியவில்லை. தமிழகத்தை பொறுத்தவரையில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களுமே நல்ல பிசினஸ் செய்யும்" என்றார்.

தமிழகத்தில் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசும், அஜித் குமாரின் துணிவும் வெளியாகி இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் வாரிசை தமிழகத்தில் லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் துணிவை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் விநியோகம் செய்ய இருப்பதும் உறுதியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Producer Dhananjayan on Vijay Varisu and Ajith Thunivu Release

People looking for online information on Ajith Kumar, Dhil Raju, Thunivu, Varisu, Vijay will find this news story useful.