www.garudabazaar.com

"ஜெட் ஸ்கை ஓட்ட கத்து கொடுத்ததே அஜித் சார் தான்😊".. மஞ்சு வாரியர் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் ஜெட் ஸ்கை சேஸிங் காட்சிகள்  குறித்த கேள்விக்கு நடிகை மஞ்சு வாரியர் பதில் அளித்துள்ளார்.

Manju Warrier about Thunivu Jet Ski chasing scene

Also Read | தீபிகா படுகோனே பிறந்தநாள்.. அசத்தலான போஸ்டரை வெளியிட்ட 'Project K' படக்குழு .!!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. .

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

Manju Warrier about Thunivu Jet Ski chasing scene

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Manju Warrier about Thunivu Jet Ski chasing scene

சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 54 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை நடிகை மஞ்சு வாரியர் அளித்துள்ளார். துணிவு படத்தில் நடிகை மஞ்சு வாரியர் 'கண்மணி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Manju Warrier about Thunivu Jet Ski chasing scene

இந்த பேட்டியில், "துணிவு டிரெய்லர் வந்த பிறகு நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சிலர் ஜெட் ஸ்கை சேஸிங் காட்சியில் இருப்பது அஜித் அல்ல டூப் என்று சமூக வலைத்தளங்களில் கூறியிருந்தனர். பக்கத்தில் இருந்த ஆதாரம் நீங்கள் தான். அந்த காட்சி பற்றி சொல்லுங்களேன்" என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மஞ்சு வாரியர், "அஜித் சார் ஓட்டாத வாகனங்களே இல்லை.

Manju Warrier about Thunivu Jet Ski chasing scene

ஜெட் ஸ்கை ஓட்ட எனக்கு சொல்லிக் கொடுத்ததே அஜித் சார் தான். பேங்காக் நகரில் அந்த காட்சியை எடுத்தோம். சூரியன் மறைவதற்கு முன் அந்த காட்சி எடுக்கப்பட வேண்டி இருந்தது. அந்த காட்சி எடுக்கும் போது ரொம்ப த்ரில்லிங்காக இருந்தது. அந்த காட்சியில் முழுவதும் நடித்தது அஜித் சார் தான். என்னிடம் படப்பிடிப்பு உருவாக்க BTS வீடியோ ஆதாரம் கூட உள்ளது". என மஞ்சு வாரியர் பதில் அளித்துள்ளார்.

Also Read | நிக்கி கல்ராணி பிறந்தநாள் கொண்டாட்டம்.. குடும்பத்துடன் சேர்ந்து வெளியிட்ட சூப்பர் PHOTOS!

"ஜெட் ஸ்கை ஓட்ட கத்து கொடுத்ததே அஜித் சார் தான்😊".. மஞ்சு வாரியர் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Manju Warrier about Thunivu Jet Ski chasing scene

People looking for online information on Ajith Kumar, Manju Warrier, Thunivu will find this news story useful.