www.garudabazaar.com
iTechUS

வாவ்.. 😍 பிரபல நடிகரின் வாரிசு-வை கையில் ஏந்தி தளபதி விஜய்! வைரல் போஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் நேற்று முன்தினம் (11.01.2023) வெளியாகி உள்ளது.

Vijay photo with Ganesh Venkatraman Daughter and Wife

Also Read | அடடே.. அஜித், மஞ்சு வாரியர் கிட்ட ஏதோ சொல்றாப்ல .. வைரலாகும் துணிவு BTS கிளிக்ஸ்.!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் நாளை ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay photo with Ganesh Venkatraman Daughter and Wife

நேற்று முன்தினம் வெளியான தமிழ் பதிப்பு வாரிசு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Vijay photo with Ganesh Venkatraman Daughter and Wife

மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தில் நடித்துள்ள நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய்யுடன் தனது மகள் சமைரா இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

Vijay photo with Ganesh Venkatraman Daughter and Wife

சமைராவை விஜய் தூக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. அந்த பதிவில், "என் குடும்பத்தில் மிகப்பெரிய, வயதில் இளைய தளபதி ரசிகை... என் 3 வயது மகள் சமைரா 😍  அவளுக்கு பிடித்த விஜய் மாமாவை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

உங்களின் ஒவ்வொரு ரசிகர்களையும் தனித்துவமாக உணர வைத்ததற்கு நன்றி விஜய் அண்ணா.. நீங்கள் அனைவரின் இதயங்களின் ராஜாவாக இருப்பதில் ஆச்சரியமில்லை❤❤" என கணேஷ் வெங்கட்ராமன் கூறியுள்ளார்.

Also Read | 'துணிவு' படத்தில் டேவிட் பில்லாவா?.. ஆமா அந்த சீன்ல வந்துச்சுல! வைரலாகும் H. வினோத் Detailing!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay photo with Ganesh Venkatraman Daughter and Wife

People looking for online information on Ganesh Venkatraman, Ganesh Venkatraman Daughter and Wife, Varisu Vijay, Vijay will find this news story useful.