www.garudabazaar.com
iTechUS

தாய் மொழி பண்டிகையான ‘பொங்கல்’ அடுத்த தலைமுறைக்கும் போக வேண்டும்.! - ஹிப் ஹாப் தமிழா ஆதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கும் 'பி. டி. சார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  இப்படத்தை இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார்.

Hiphop Tamizha Adhi about Pongal in PT Sir First Look

Also Read | “ராபர்ட் மாஸ்டர் பெரியவரு..”.. பெரியவருனு சொன்னா கோச்சுக்க மாட்டாரா?.. ரச்சிதா பரபரப்பு பதில்.!

'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'பி. டி. சார்'. இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மிரா பர்தேசி நடித்திருக்கிறார்.  இவர்களுடன் நடிகை அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த், ஆர். பாண்டியராஜன், இளவரசு, தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர். தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.

Hiphop Tamizha Adhi about Pongal in PT Sir First Look

பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் விளையாட்டுத்துறை ஆசிரியரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி. கே. கணேஷ் தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கில் ஹிப் ஹாப் தமிழாவின் தோற்றம் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வேல்ஸ் குழும கல்லூரி மாணவ மாணவிகளின் முன்னிலையில் வெளியிடப்பட்டதுடன் மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்காக விசில்களை படக்குழுவினர் வழங்கியுள்ளனர்.

Hiphop Tamizha Adhi about Pongal in PT Sir First Look

இப்படம் பற்றி பேசியுள்ள இப்படத்தின் இயக்குநர்,  “கணக்கு, அறிவியல், தமிழ் என ஒவ்வொரு ஆசிரியரையும் ஒவ்வொருவருக்கு பிடிக்கும். ஆனால் ‘பி.டி. சாரை’ அனைவருக்கும் பிடிக்கும். அனைவருக்கும் பிடிக்கும் 'பி டி சார்' வேடத்தில், அனைவருக்கும் பிடித்த நாயகனான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பது இரட்டை சந்தோசம். படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டிற்கு கிடைத்த இதே ஆரவாரமான வரவேற்பு, படத்தின் வெளியீட்டின் போது கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.

Hiphop Tamizha Adhi about Pongal in PT Sir First Look

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, “கல்லூரி வளாகத்தில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, கலை விழா.. என எந்த விழாவையும் நடத்தலாம். ஆனால் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருவிழா, கல்லூரி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெறுவது பாராட்டுக்குரியது. இன்றைய சூழலில் பண்டிகைகளை மக்கள் விசேஷமாகக் கொண்டாடுவதில்லை. ஆனால் பொங்கல் விழாவை, ஒரு திருவிழா போல் கொண்டாடுவது, தமிழ் உணர்வை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது போல் இருக்கிறது. இந்த எண்ணத்திற்கு பாராட்டுகள். இதற்கு அடித்தளமிட்ட பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரான ஐசரி கணேஷ் அவர்களின் வாரிசு பிரீத்தா கணேசுக்கு பாராட்டுகள்.

இன்று உலக அளவில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருந்தாலும், நாம் சிந்திப்பது தாய்மொழியில் தான். தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தாய்மொழிக்கும், அதனுடன் தொடர்புடைய திருவிழாக்களுக்கும், பண்டிகைகளுக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுவதை வெகுவாக பாராட்டுகிறேன். நீங்களும் கலந்துகொண்டு இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுங்கள். தீபாவளியை விட உற்சாகமாக கொண்டாடப்பட வேண்டிய திருவிழா பொங்கல் திருவிழா. இங்கு வருகை தந்தவுடன் இயக்குநரிடம் நீங்கள் வழங்கிய விசிலின் ஒலியை விட, மாணவர்களின் குரல் ஒலி அதிர்வை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டேன். 'பி டி சார்' படத்தை தற்போது தான் தொடங்கி இருக்கிறோம். இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்கள் கழித்து திரைக்கு வரும். உங்களுடைய ஆதரவை வழக்கம் போல் 'பி டி சார்' படத்திற்கும் வழங்குவீர்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

முன்னதாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் கடந்த ஆண்டில் மாபெரும் வெற்றியைப் பெற்ற 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தினை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | Varisu : "அட .. இந்த வெர்ஷன் நல்லாருக்கே".. விஜய்க்கு கதை சொன்ன ரஷ்மிகா! ‘வாரிசு’ Sneak Peek

Hiphop Tamizha Adhi about Pongal in PT Sir First Look

People looking for online information on Hiphop Tamizha Adhi Pongal PT Sir will find this news story useful.