www.garudabazaar.com
iTechUS

Varisu : "அட .. இந்த வெர்ஷன் நல்லாருக்கே".. விஜய்க்கு கதை சொன்ன ராஷ்மிகா! ‘வாரிசு’ Sneak Peek

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் அதே 11.01.2023 அன்று வெளியானது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

Vijay Rashmika Varisu Sneak Peek Scene is Out

Also Read | “நான் ஹர்ட் ஆகல... ஆனா அழுதேன்.. ஏன்னா..”.. ராபர்ட் மாஸ்டர் விவகாரத்தில் Bigg Boss ரச்சிதா Open talk!

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.  தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார்.

Vijay Rashmika Varisu Sneak Peek Scene is Out

மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது. இதனிடையே வாரிசு திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் முதல் நாளில் மட்டும் 20 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. 

Vijay Rashmika Varisu Sneak Peek Scene is Out

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் சிறப்பு காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் யோகி பாபு முன்னிலையில் நாயகி ராஷ்மிகா, விஜய்யிடம் ஒரு கதை சொல்ல வருகிறார். அப்போது விஜய் எதையெதையோ பேசி அவரை கதை சொல்ல விடாமல் இடைமறித்து காமெடி செய்து கலாய்க்கிறார். யோகி பாபுவோ, அவங்கள கதையை முழுசா சொல்ல விடுப்பா என்று சொல்கிறார்.

Vijay Rashmika Varisu Sneak Peek Scene is Out

ராஷ்மிகா சொல்லும் கதைப்படி, ஒரு பெண்ணுக்கு ஒரு பையனை பிடித்து விட்டதாகவும், முதலில் அந்தப் பெண் கொஞ்சம் தப்பாக புரிந்து கொண்டதாகவும் பிறகு அந்த பையனுடன் சேர்ந்து வாழ்வதற்கு அப்பெண் யோசிப்பதாகவும் இதற்கு கிளைமாக்ஸ் கிடைத்தால் மகிழ்ச்சியான எண்டிங் கிடைக்கும் என்று கூறுகிறார்.  ஆனால் அந்த பெண்ணுக்கு ஈகோ ஈரோடு வரை இருப்பதாக சொல்லி விஜய் கமெண்ட் அடிக்க, பிறகு அதே கதையை விஜயின் அருகில் வந்து ராஷ்மிகா சொல்ல அதற்கு விஜய், “ஐயோ இந்த வெர்ஷன் சூப்பரா இருக்கே” என்று கூறுகிறார். வாரிசு படத்தில் இடம்பெற்ற இந்த காட்சியின் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Also Read | “ராபர்ட் மாஸ்டர் பெரியவரு..”.. கோச்சுக்க மாட்டாரா?.. ரச்சிதா பரபரப்பு பதில்.! Bigg Boss

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Rashmika Varisu Sneak Peek Scene is Out

People looking for online information on Rashmika, Varisu, Varisu Pongal, Vijay will find this news story useful.