www.garudabazaar.com

"துணிவும், வாரிசும் ஒரே நாள் ரிலீஸ் ஆனா".. எதிர்பார்ப்பை எகிற வைத்த ஷ்யாம்.. Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர் விஜய். இவர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

shaam about vijay varisu and ajith thunivu movies

வாரிசு படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வரும் நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, யோகிபாபு, ஷ்யாம், சங்கீதா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

வாரிசு படத்திற்கு ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

shaam about thalapathy vijay varisu release date

வாரிசு திரைப்படம், 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் இரண்டு சிங்கிள்களான 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' ஆகிய பாடல்களும் ரிலீஸாகி செம ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

வாரிசு படத்தில் பிரபல நடிகர் ஷ்யாமும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தள்ளார். இவர் Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் வாரிசு திரைப்படம் குறித்தும், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில், வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஷ்யாம் கூறி உள்ள தகவல், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

துணிவு மற்றும் வாரிசு ஒரே நாளில் தான் ரிலீஸ் ஆக போகிறதா என்ற நெறியாளர் கேள்விக்கு பதிலளித்த நடிகர் ஷ்யாம், "ஜனவரி 12 ஆம் தேதி வாரிசு ரிலீஸ் ஆகிறது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. துணிவும் அறிவிச்சுட்டாங்கன்னு நெனைக்கிறேன்" என தெரிவித்தார்.

shaam about thalapathy vijay varisu release date

தொடர்ந்து பேசிய ஷ்யாம், "நல்ல விஷயம் தான். பொங்கல் டைம்ல ஒரு 5 நாள் லீவு இருக்கும்ன்னு நினைக்குறேன். அவங்க அவங்க ரசிகர்கள் வந்து அந்தந்த படம் பாப்பாங்க. அதுக்கு அப்புறம் இத பாப்பாங்க, ஃபேமிலிஸ்க்கும் இது ஒரு கொண்டாட்டமா இருக்கும். அப்புறமா இண்டஸ்ட்ரிக்கு இது ஒரு நல்ல ஆரம்பம். நல்ல ஒரு பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் ஆச்சுன்னா, நிறைய படங்கள் வரும். ஆரோக்கியமாவும் இருக்கும். அப்படி ஒரு ஆரம்பம் 2023 ஆ இருக்கும்ன்னு நான் நம்புறேன்" என ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

"துணிவும், வாரிசும் ஒரே நாள் ரிலீஸ் ஆனா".. எதிர்பார்ப்பை எகிற வைத்த ஷ்யாம்.. EXCLUSIVE வீடியோ

Tags : Vijay, Varisu, Shaam

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

shaam about vijay varisu and ajith thunivu movies

People looking for online information on Shaam, Varisu, Vijay will find this news story useful.